துணிவை முந்த பல கோடி செலவு செய்யும் விஜய்.! அதுக்குன்னு இப்படியே செய்றது…

thunivu-ajith
thunivu-ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித் மற்றும் விஜய். இதில் நடிகர் அஜித் அவர்கள் தற்போது எச் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து உள்ள திரைப்படமான துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக காத்திருக்கிறது.

அதே தினத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் வெளிவர காத்திருக்கிறது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகலுக்கு பிறகு நடிகர் விஜய் மற்றும் அஜித் தங்களுடைய திரைப்படங்கள் மூலம் மறுபடியும் மோத இருக்கிறார்கள் இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா பாடல் வெளியாகி இருக்கிறது. மேலும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்திலிருந்து தீ தளபதி மற்றும் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்திற்காக ப்ரோமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது அதில்  சென்னை மின்சார ரயிலில் வாரிசு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பிரமோஷன் செய்துள்ளது படக்குழு.

இது ஒரு பக்கம் இருக்க தானும் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் உரிமையாளர்களை அழைத்து சந்தித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ரசிகர்களை சந்தித்து உள்ளார் நடிகர் விஜய். இதனைப் பலரும் ஆதரித்து வந்தாலும் ஒரு சிலர் விமர்சித்து வருகிறார்கள் அந்த வகையில் நடிகர் விஜய் வாரிசு படத்தின் பிரமோஷன் செய்யும் விதிமுறையை பார்த்து துணிவை முந்த பல கோடி செலவு செய்து வருகிறாரா விஜய் என கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் நடிகர் அஜித்குமார் துணிவு திரைப்படம் வெற்றியடைந்தாலே அது மிகப்பெரிய பிரமோஷன் என்று கூறியது அஜித் ரசிகர்கள் மத்தியில் துணிவு திரைப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது. அஜித் குமார் எந்த ஒரு பிரமோசனும் செய்யாமல் தன்னுடைய படம் வெளிவந்தால் போதும் என்று இருக்கிறார் ஆனால் விஜய் துணிவு திரைப்படத்தை எப்படியாவது முந்த வேண்டும் என்று பல கோடி செலவு செய்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது.