தனது முதல் திரைப்படத்திலேயே புளியமமாக பிடித்த விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்.. இதோ மாஸ் அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் விஜய், இவர் வசூல் மன்னனாகவும் இருக்கிறார் இவர் மிகவும் பிஸியாக கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக தளபதி விஜய் தன்னுடைய 69 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் இந்த திரைப்படத்துடன் கடைசி என ஏற்கனவே விஜய் அறிவித்திருந்தார் தன்னுடைய அரசியல் பயணத்தை அதிரடியாக தொடங்கினார் அரசியலில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி வரும் விஜய் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

தளபதி விஜய் சினிமாவை விட்டு வெளியே சென்றாலும் அடுத்ததாக விஜயின் மகன் சஞ்சய் உள்ளே களமிறங்கினார் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது இந்த திரைப்படம் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாக தகவல் கிடைத்தது.

கதை எழுதும் வேலையில் முன்புறமாக ஈடுபட்டு வரும் விஜய்யின் மகன் நடிகர்கள் தேர்வு செய்யும் பணியும் பார்த்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா அல்லது சுஷிவ் ஷியாம் இசையமைப்பாளராக கமிட்டாக இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.

தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே நல்ல இசையமைப்பாளரை பிடித்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.