Vijay: சினிமாவில் எத்தனையோ அறிமுக இயக்குனர்கள் பட வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வருகிறார்கள் எப்படியாவது ஒரு வாய்ப்பு கிடைத்துவிட வேண்டும் என அங்கும் எங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் மிகப் பெரிய நடிகரின் மகன் என்பதால் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு மிகப்பெரிய வாய்ப்பு தேடி வந்துள்ளது என சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதில் சந்தோஷமான விஷயம் என்னவென்றால் விஜய் ஒரு மாஸ் நடிகர் அவரை போல் நானும் ஒரு நடிகனாக மாற வேண்டும் என்று நினைக்காமல் விஜயின் மகன் ஒரு இயக்குனராக வேண்டும் என்று முடிவு செய்திருப்பது பாராட்டக் கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பல நடிகர்களின் மகன்கள் ஹீரோவாக நடித்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் விஜயின் மகன் அப்படி கிடையாது இயக்குனராக ஆக வேண்டும் என ஆசை பட்டுள்ளார்.
விஜயின் மகன் ஜேசன் சஞ்சயை பல இயக்குனர்கள் நடிகனாக நடிக்க வைக்க திட்டம் போட்டார்கள் அந்த லிஸ்டில் ஏ ஆர் முருகதாஸ் அவர்களும் ஒருவர் எப்படியாவது விஜய் மகனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி விடலாம் என முடிவு செய்திருந்தார் ஆனால் விஜயின் மகன் என்னோட ஆசை நடிகனாக மாறுவது கிடையாது இயக்குனராக ஆவது தான் என்னுடைய ஆசை என அந்த சிறு வயதிலேயே உறுதியாக இருந்துள்ளார்.
நிச்சயம் விஜய்யின் மகன் விஜய்க்கு சவால் விடும் வகையில் படத்தை இயக்கிய வெற்றி பெறுவார் என பலரும் கூறி வருகிறார்கள். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் விஜயின் மகன் லைக்காவின் திரைப்படத்தை இயக்கப் போவது தளபதிக்கு தெரியாதாம் என தகவல் பரவி வருகிறது ஆனால் விஜயின் மனைவி சங்கீதாவின் அப்பா ஒரு ஈழத் தமிழர் அதேபோல் லைக்கா சுபாஷ் காரம் ஒரு ஈழத் தமிழர் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் லைக்கா நிறுவனத்தின் திரைப்படம் மிக எளிதாக விஜய் மகனுக்கு கிடைத்துள்ளது என தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
லைக்கா நிறுவனமும் விஜய் மீது கடும் கோபத்தில் இருக்கிறது அதற்கு காரணம் கத்தி திரைப்படத்திற்கு பிறகு விஜய் லைக்காக நிறுவனத்திற்கு கால் சீட்டை கொடுக்கவில்லை விஜயின் கால் சீட்டுக்காக பல வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறது லைக்கா நிறுவனம் அதனால் விஜய்யை எப்படியாவது லாக் செய்ய வேண்டும் என்பதற்காக விஜய்யின் மகனுக்கு இந்த அரிய வாய்ப்பை வழங்கியுள்ளதாக பலரும் கூறி வருகிறார்கள் தனக்கே தெரியாமல் விஜய் மகனுக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதால் லைக்கா நிறுவனத்தின் மீது விஜய் கடும் கோபத்தில் இருக்கிறார்.