90களில் தமிழ் சினிமாவில் ஜாக்லெட் பாயாக இருந்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ் இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து சினிமா துறையில் ஒரு நம்பிக்கை தூணாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த பல திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதுண்டு.
அதனை தொடர்ந்து நடிகர் அப்பாஸ் கடைசியாக பச்சைக்களம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் பிறகு ஏரும் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தற்போது தனது குடும்பத்துடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார் நடிகர் அப்பாஸ். இதனை தொடர்ந்து சமீபத்தில் தன்னுடைய முட்டியில் பாதிப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து அப்பாஸ் அவர்கள் ஒரு பேட்டியில் 1997 ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை படத்தில் முதலில் நான்தான் நடிக்க வேண்டி இருந்தது என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக காதலுக்கு மரியாதை திரைப்படம் அமைந்துள்ளது.
இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் அப்பாஸ் தான் நடிக்க இருந்தது ஆனால் அவருடைய மேனேஜர் வேற ஒரு படத்திற்கு கால் சீட் கொடுத்ததால் காதலுக்கு மரியாதை படத்தில் அப்பாசால் நடிக்க முடியவில்லை என்று வருத்தத்துடன் கூறியிருந்தார்.
ஆனால் அந்த படத்தில் நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் நடிகர் விஜய்க்கு ஒரு அங்கீகாரமும் கிடைத்தது அது மட்டுமல்லாமல் தற்போது முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜயின் வாழ்க்கையில் காதலுக்கு மரியாதை திரைப்படம் ஒரு தூணாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அப்பாஸின் மேனேஜர் காதலுக்கு மரியாதை படத்திற்கு கால் சீட் கொடுத்து இருந்தால் விஜய்க்கு இந்த மாதிரி ஒரு தரமான திரைப்படம் அமைந்திருக்காது என்று கூறப்படுகிறது.