தளபதி விஜய்யின் தங்கை மரணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் தளபதி விஜய் இவர் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர், விஜய்க்கு ஒரு தங்கை இருந்தார் அவரின் பெயர் வித்யா, இவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார் விஜய்.
இந்த பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக விஜய் நடித்து வெளியாகிய திருப்பாச்சி வேலாயுதம் ஆகிய திரைப்படங்களை பார்த்தாலே உங்களுக்கு தெரியும், இந்திய நடிகர்களில் பல நடிகர்கள் பெண்கள் மத்தியில் ரொமான்டிக் நாயகனாக வலம் வந்து இருக்கலாம், ஆனால் பல பெண்கள் அன்போடு அண்ணா என்று அழைக்கும் ஒரே இந்திய நடிகர் விஜய் தான்.
இதற்கு காரணம் இவரது நிஜ வாழ்க்கையில் நடந்த மனதை உருகவைக்கும் நிகழ்வுதான், விஜய்க்கு செல்லமான தங்கை வித்தியா என்று ஒருவர் இருந்தார், அவர் எதிர்பாராத விதமாக சிறு வயதிலேயே இறந்துவிட்டார், இவரின் இறப்பு விஜய்யை பெருமளவில் பாதித்தது, அன்றிலிருந்து விஜய்க்கு தங்கை என்றால் மிகவும் பிடிக்கும், விஜய் தற்போது அமைதியாக இருக்க காரணம் விஜய் தங்கையின் மரணம் தான்.
ஏனென்றால் விஜய் சிறுவயதில் விஜய் மிகவும் சுறுசுறுப்பாகவும் துருதுருவென வும் இருப்பார். ஆனால் அவரின் தங்கை வித்தியாவின் மரணம் தான் இன்று இவரை அமைதியாக மாற ஒரு காரணமாக அமைந்துவிட்டது, தன்னுடைய அன்பு தங்கை தன்னுடன் தினமும் விளையாடியதும் திடீரென அவர் மரணமடைந்தது விஜய்யை மனதளவில் பெரிதாக பாதித்துவிட்டது, விஜய் தனது தங்கையின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார் அதற்கு வித்தியா அறக்கட்டளை என பெயரிட்டுள்ளார். விஜய் யாருக்கும் தெரியாமல் கல்வி உதவி செய்வது எல்லாம் இந்த அறக்கட்டளை மூலம் தான்.