நடிகர் விஜய்யின் ஹேர் ஸ்டைல் குறித்து பிரபலம் ஒருவர் பங்கமாக கலாய்த்து இருக்கும் நிலையில் தற்போது இது இணையதளத்தில் பற்றி எரிந்து வருகிறது. அதாவது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற முடிந்தது. இதனை அடுத்து சென்னைக்கு திரும்பிய படக்குழு சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் முடியும் என கருதப்படுகிறது இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இவ்வாறு லியோ படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்தது எந்த இயக்குனர் உடன் இணைய போகிறார் என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்குனர் அதிகாரப்பூர்வமான தகவல் இன்று வெளியாகியுள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படமாக இந்த படம் உருவாகப்பட இருப்பதாகவும் முதன்முறையாக வெங்கட் பிரபு விஜய் உடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு தரமான இசையை வழங்கி வரும் யுவன் சங்கர் ராஜா விஜய்யின் இந்த படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் விஜய்யை அவருடைய ஹேர் ஸ்டைலை வைத்து தொடர்ந்து பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
அதாவது விஜய் விக் வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில் இதனை விஜய்யின் ரசிகர்கள் மறுத்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் மனோபாலா இறப்புக்கு வந்த பொழுது கூட விஜயின் தலைமுடியை குறித்து விவாதம் எழுந்தது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பயில்வான் ரங்கநாதன் விஜய்யின் முடியை குறித்து பேசி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அவர் பேசுகையில் விஜய் கடந்த ஏழு வருடங்களாக படங்களில் விக் வைத்து தான் நடித்த வருகிறார். ஆனால் எஸ்.ஏ சந்திரசேகருக்கு இன்னமும் முடியும் நன்றாக இருக்கிறது விஜய்க்கு எதனால் முடி உதிர்ந்தது என்றால் ரசாயன கலவை கலந்த கெமிக்கல் ஷாம்புகளை பயன்படுத்துகிறார். ஷாம்புவால் முடி உதிர்ந்து விட்டது என்று ரஜினியே சொல்லி இருக்கிறார். இவரை அடுத்து டுத்து கமலஹாசன் அவர்களுக்கு முடி கொட்டியது ஆனால் ஆரம்பத்திலேயே சுதாகரித்துக் கொண்ட அவர் வெளிநாட்டுக்கு சென்று தலைமுடியை தலையில் நடும் ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டார்.
ரஜினிகாந்த் தனக்கு முடி உதிர்வதை பற்றி கவலைப்படாமல் என்ன இருக்கிறதோ அதனுடன் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். ஆனால் விஜய் அப்படி கிடையாது. அதேசமயம் அஜித்துக்கு நன்றாகவே முடி இருக்கிறது விக் வைப்பது ஒன்றும் பெரிய தவறு இல்லை ஆனால் ஒரே மாதிரியான விக்கை வைக்க வேண்டும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விக்கை வைக்க கூடாது சமீபத்தில் அவர் தனது ரசிகர்களை சந்தித்தபோது கூட பெரிய டோப்பா முடியை மாட்டி இருந்தார் இதனால் அஜித் ரசிகர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் விஜய் ரசிகர்கள் திணறிக் கொண்டிருந்தனர் என்றார்.