தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவரும் இப்பொழுது தனித்தனியாக படம் பண்ணி வருகிறார்க்கள்.. இருவரும் இப்போ இணைவதற்கான சாத்திய கூறுகள் இல்லை ஆனால் ஆரம்பத்தில் நிறையவே இருந்தது “ராஜாவின் பார்வையிலே” படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர்.
அதனைத் தொடர்ந்து நேருக்கு நேர் திரைப்படத்திலும் இணைந்து நடிக்க வேண்டிய சூழல் இருந்தது ஆனால் சில காரணங்களால் அஜித் அந்த படத்தின் ஷூட்டிங்கில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு இருவரும் ஒன்று சேரவே இல்லை.. இதற்கு காரணம் எந்த ஊரு இயக்குனரும் அஜித், விஜய்யை சேர்த்து வைத்து படம் பண்ண விரும்பவில்லை.. அழைக்கவும் இல்லை..
ஆனால் இருவருக்கும் இடையே நல்ல நட்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது என பல தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு அஜித், விஜய் பற்றி பேசி உள்ளார். அதில் அவர் சொன்னது.. ஒரு படத்தின் ஷூட்டிங் போது பத்திரிகையாளர் செய்யாறு பாலு அஜித்திடமும், விஜயிடமும் பேட்டி எடுப்பதற்கு டைம் வாங்கி இருக்கிறார் முதலில் அஜிதிடம் பேட்டி எடுத்திருக்கிறார்.
ஆனால் அந்த பேட்டி முடிவதற்கு நேரம் ஆகிவிட்டது. பேட்டி முடிந்ததும் கிளம்பும் போது அவரிடம் அஜித் குமார் எங்கேயாவது ட்ராப் பண்ணனும்மா தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்லி கார் அனுப்புகிறேன் என கூறியிருக்கிறார் அதற்கு செய்யாறு பாலு தயங்கியபடியே விஜய் சார் அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கிறார் என சொல்ல உடனே பதறிப்போன அஜித்குமார் இதை நீங்க முன்னாடியே சொல்றது இல்லையா..
அவர் அங்க காத்துக் கொண்டிருப்பார் என கூறி தயாரிப்பு நிறுவனத்தின் காரை எடுத்து வர சொல்லி இருக்கிறார் இதனை எடுத்து அந்த கார் டிரைவரும் எவ்வளவு வேகமாக போக முடியுமோ அவ்வளவு வேகமாக காரை ஓட்டிக்கொண்டு செல்லுங்கள் அங்கு ஒரு பெரிய ஸ்டார் காத்துக் கொண்டிருக்கிறார் என கூறி இருக்கிறார் இதனை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் கூறினார் இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அப்போ அஜித், விஜய் ஆரம்பத்தில் இருந்து நல்ல நட்புடன் தான் இருந்திருக்கிறார்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.