விஜய் சார் உங்களுக்காகலாம் படத்தின் காட்சிகளை மாற்றமுடியாது – இயக்குனர் விக்கிரமன் அதிரடி.! வைரல் வீடியோ இதோ.

vikraman
vikraman

diretநடிகர் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் காதல் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து இருந்தாலும்  அளவுக்கு  அப்படங்கள் வெற்றியை பெறவில்லை. அப்போது அவரது தந்தை சந்திரசேகர் நம்பி தான் அவர் இருந்தார் அதன்பிறகு என்னுடன் இணைந்தார்.

அப்பொழுது நான் பூவே உனக்காக திரைப்படத்தில் விஜய் வைத்திரு ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தேன். இந்த படத்திற்கு முன்பு அவருக்கு வெறும் இளசுகள் மட்டும்தான் ரசிகர்களாக இருந்தனர் அதன் பிறகு மொத்த பேமிலி ஆடியன்ஸ்களையும் அவர் கவர்ந்து இழுத்தார்.

அந்தப் படத்திற்குப் பின்பு விஜய் மற்ற இயக்குனர்களுடன் சேர்ந்து அடுத்தடுதத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து இருந்தார். ஆனால் ஒரு முறை கூட இயக்குனர்  விக்ரமுடன் மட்டும் இணைந்து பணியாற்றவில்லை.

2002 ஆம்ஆண்டு இயக்குனர் விக்ரமன் நடிகர் சூர்யாவை வைத்து உன்னை நினைத்து என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார் ஆனால் இந்த திரைப்படத்தில் முதலில் நடித்தது என்னமோ விஜய் தானாம்.

படத்தின் சூட்டிங் நடப்பதற்கு முன்பாக விஜய்யின் லைலாவும் இருக்கும் போட்டோக்கள் கூட எடுக்கப்பட்டது ஆனால் ஒருசில காரணத்தினால் இந்த படத்தில் இருந்து அவர் விலக பின் சூர்யா இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

ஏன் விஜய் விலகினார் என்பது குறித்து தற்போது இயக்குனர் விக்ரமன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அவர் சொன்னது. இந்த படத்தில் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டது ஆனால் விஜய்க்கு இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் உடன்பாடு இல்லை அதனால் கிளைமாக்ஸை மாற்றச் சொன்னார்.

ஆனால் எனது படங்களில் நான் என்ன நினைக்கிறேனோ அதை தான் எடுப்பேன் விஜயகாந்த் கூட படம் பண்ணிட்டேன் அவர் ஒரு வார்த்தை கூட என்ன கேட்கல அதனால் உங்களுக்காக படத்தின் கதையை மாற்ற முடியாது என கூறி விட்டதாக கூறினார்.

இயக்குனர் விக்ரமன் பேட்டியில் சொன்ன போது எடுக்கப்பட்ட வீடியோ.