விஜய் பாடிய பாடலுக்கு இவ்வளவுதான் ரீச்சா.. அரபி குத்து பரவாயில்லையே.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

vijay
vijay

தமிழ் சினிமாவில் காதல் ஆக்ஷன் சென்டிமென்ட் என பல படங்களில் நடித்து தனக்கென ஒரு நிரந்தர ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய். தற்போது விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து செல்வராகவன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த பீஸ்ட் திரைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  படம் வருகின்ற ஏப்ரல் 13 அன்று திரையரங்கில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் ஆடியோ லான்ச் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் என தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் விஜய் கமிட்டாகி உள்ளார்.

அந்த வகையில் விஜய்யின் அடுத்த 66 வது படம் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாக உள்ளது. இந்த படத்தின் கதையை கேட்டு விஜய் ஓகே சொல்லி மேற்கண்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்து 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.  சமீபத்தில் விஜயின் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி மக்களிடையே செம்ம டிரெண்ட் ஆகி வந்தது.

இந்த பாடலுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் பலரும் நடனமாடி வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தனர். தற்போது பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடலான ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளிவந்துள்ளது. இந்த பாடல் வெளிவந்த ஐந்தே நிமிடத்தில் மூன்று லட்சம் பார்வையாளர்களையும் பத்து நிமிடத்தில் 5.5 லட்சம் பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளன.

ஆனால் கடந்த மாதம் வெளிவந்த அரபி குத்து பாடல் வெளிவந்த பத்தே நிமிடத்தில் 8 லட்சம் பார்வையாளர்களை கடந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடல்  ஜாலியோ ஜிம்கானா பாடலை விஜய் பாடியும் அதிகளவு ட்ரென்ட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.