தமிழ் சினிமா உலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் ஒவ்வொரு படமும் முடியும் போது தனது ரசிகர்களை சந்திப்பது வழக்கம் ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரசிகர்களை சந்திக்க முடியாமலும் போயிருக்கிறார் அது ரசிகர்களை ரொம்பவும் வருத்தப்பட வைக்கிறது..
அப்படி அண்மையில் கூட ஒரு சம்பவம் அரங்கேறியது. தளபதி விஜய் தற்போது தனது 66 வது திரைப்படமான வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு வருகிறது வாரிசு படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று பக்கத்தில் வைரலாகி வருகிறது.
சில தினங்களுக்கு முன் எண்ணூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அங்கு குவிந்தனர் ஆனால் நடிகர் விஜய் வெளிவராததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர் மேலும் போலீசார் தடியடி நடத்திய கலைத்தனர். ஆனால் நேற்று அதற்கு எதிர் மாறாக நடந்தது தளபதி விஜய் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரசிகர்களை பார்த்து கையை அசைத்தார்.
அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட வீடியோவை.. பார்த்த ரசிகர்கள் விஜய் எங்களுக்காக கூட்டத்தை கூட பார்க்காமல் வந்து கையசைத்தது சந்தோஷமாக இருக்கிறது என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ..
Mass euphoria at #Varisu shooting spot #Thalapathy @actorvijay pic.twitter.com/mRpTIua9oh
— Rajasekar (@sekartweets) September 27, 2022