தளபதி விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் சஞ்சனா திவாரி நடிகர் விஜயை பற்றி கூறியுள்ள தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி படி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இந்த படத்தினை தில்ராஜ் & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரித்துள்ளார்கள். மேலும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இவர்களை தொடர்ந்து பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, குஷ்பூ போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்திற்கு ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை மற்றும் கூடுதல் துறை கடத்தையை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒலிப்பதிவை தமன் மற்றும் கார்த்திக் பழனி மேற்கொண்டுள்ளனர் மேலும் கே.எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இவ்வாறு இந்த படம் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு இரண்டு திரைப்படங்களும் வெளியாகி உள்ள நிலையில் இந்த படங்களில் தல 50 சதவீத திரையரங்கு ஓட்டுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வாரிசு திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சஞ்சனா திவாரி சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் பல சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் மேலும் இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த இவர் முதன்முறையாக வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது நான் ஆரம்பத்தில் இருந்தே விஜய் சாரின் மிகப்பெரிய ரசிகை ஆடிஷனுக்கு பெரிய நம்பிக்கை இல்லாமல் தான் சென்றேன் ஆனால் சில நாட்களுக்குப் பிறகு எனக்கு போன் வந்தது அதை நான் செலக்ட்டாகி விட்டதாக கூறினார்கள்.
என்னால் அதனை நம்பவே முடியவில்லை முதல் நாள் சூட்டிங் நான் ஓரமாக நின்று கொண்டிருந்தேன் அப்பொழுது விஜய் சார் வந்தார் அவரைப் பார்த்ததும் நான் ஷாக்காகி அப்படியே நின்றேன். அவர் ஹாய் என்றார் நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன் பின்னர் அங்கிருந்து அனைவரிடமும் அவர் ஹாய் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது அவர் ஹாய் சொல்லியும் பதில் சொல்லவில்லையே என வருத்தப்பட்டேன் ஆனால் அடுத்த நாள் அவரிடம் போய் தயக்கத்துடன் பேசினேன் ரொம்ப சகஜமாக என்னிடம் பேசினார் அதன் பிறகு எப்பொழுதும் நான் ஹாய் சொல்வேன் பதிலுக்கு அவரும் ஹாய் சொல்வார் என தெரிவித்துள்ளார்.