தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்பொழுது வில்லன் என்ற தந்திரத்தை கையில் எடுத்து அதில் கலக்கி வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் உப்பண்ணா. இத்திரைப்படம் ரிலீசாகி மூன்றே நாட்களில் 50 கோடி வசூலித்து சாதனை படைத்தது.இப்படம் விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது என்று கூறலாம்.அந்த அளவிற்கு இப்படத்தில் தனது வில்லதளத்தை வெளிப்படுத்தி இருப்பார்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவர் 10 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார்.இந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இத்திரைப்படத்தை வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்குகிறார்.இசக்கி துரை தயாரிக்கிறார்,நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமிழ்,தெலுங்கு இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிறகு அனிகா சுப்பிரமணியம், சின்னி ஜெயந்த்,விவேக், ராகு ஆதித்யா உட்பட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.
எனவே ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இத்திரைப்படத்தின் ரிலீஸ்சிர்ருக்காக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தின் டீசர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த டீசர்.