குறைவான பட்ஜெட்டில் உருவாகி கோடியில் லாபம் பார்த்த விஜய் சேதுபதியின் ஐந்து திரைப்படங்கள்.!

Vijay Sethupathy top 5 low budget
Vijay Sethupathy top 5 low budget

Vijay Sethupathy top 5 low budget: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாகவும் ஹீரோவாகவும் கலக்கி வரும் நிலையில் இவருடைய நடிப்பில் குறைவான பட்ஜெட்டில் உருவாகி பல கோடி வசூல் செய்து அதிக லாபம் பார்த்து தயாரிப்பாளர்களை மகிழ்வித்த டாப் 5 படங்கள் லிஸ்ட்.

பீட்சா: விஜய் சேதுபதி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான பீட்சா திரைப்படம் சுமார் 1.5 கோடி பட்ஜெட் உருவானது இப்படம் 8கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

மொத்த உண்மையையும் சொல்ல வந்த முத்து.! நெஞ்சு வலி வந்தது போல் நடித்து சொல்லவிடாமல் தடுத்த அண்ணாமலை.! பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்: 2012ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் நகைச்சுவை கலந்த படமாக வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியிருந்தார். இப்படம் வெறும் 80 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.

சூது கவ்வும்: நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படம் சுமார் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 35 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

தர்மதுரை: சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராய், தமன்னா இணைந்து நடித்த தர்மதுரை 2016ஆம் ஆண்டு 13 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் 25 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

தமிழ் கொடுத்த ஐடியாவால் யாருக்கோ விரித்த வலையில் தானே சிக்கிக் கொள்ளப் போகும் அர்ஜுன்.! நாலா பக்கமும் விசாரிக்கும் போலீஸ்…

சேதுபதி: விஜய் சேதுபதி போலீசாக மிரட்டிய சேதுபதி திரைப்படம் 2016ஆம் ஆண்டு எஸ்.உ. அருண்குமார் இயக்கத்தில் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது இப்படம் வெளியாகி 30 கோடிக்கு மேல் வசூல் செய்து தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது.