தமிழ் சினிமாவில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் எதார்த்தமான பேச்சாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கட்டிப்போட்டவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் வருடத்திற்கு அரை டஜன் திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக விஜய் சேதுபதியின் திரைப்படம் அதிகமாக ரிலீஸாகி கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் இன்று விஜய் சேதுபதியின் நடிப்பில் அனபெல் சேதுபதி என்ற திரைப்படம் வெளியாகியது அதுமட்டுமில்லாமல் கடந்த வாரம் விஜய் சேதுபதி நடிப்பில் லாபம் என்ற திரைப்படம் வெளியானது. இப்படி தொடர்ந்து விஜய் சேதுபதி திரைப்படம் வெளியாகி வருகிறது அனபெல் சேதுபதி என்ற திரைப்படத்தை தீபக் சுந்தர்ராஜன் என்பவர்தான் இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க த்ரில்லர் திரைப்படமாக உருவாகியது. இந்த திரைப்படத்தில் அரண்மனையை மையமாக வைத்து கதை உருவாக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இயக்குனர் பற்றிய சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வந்தவர் சுந்தர்ராஜன் அவரின் மகன்தான் தீபக் சுந்தர்ராஜன்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய அனபெல்லா சேதுபதி திரைப்படத்தின் இயக்குனர் சுந்தர்ராஜன் அவர்களின் மகன் தீபக் சுந்தரராஜன் தான். 1982 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான பயணங்கள் முடிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஆர் சுந்தர்ராஜன் இந்த திரைப்படத்தில் மோகன் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தார்கள்.
இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 365 நாட்கள் ஓடி மக்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது தான் முதல் திரைப்படத்திலேயே தான் பெரிய இயக்குனர் என்ற சாதனையை நிரூபித்தவர் அதுமட்டுமில்லாமல் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி திரைப்படங்கள் தான். இவர் விஜயகாந்த், ரஜினி, விஜய் போன்ற பல தமிழ் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
இதுவரை சுந்தரராஜன் இருபத்தி நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார் கடைசியாக இவர் நிலாச்சோறு என்ற திரைப்படத்தை இயக்கினார் சுந்தரராஜன் அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் அசோக் கார்த்திக் தீபக் சுந்தர்ராஜன். இதில் தீபக் சுந்தர்ராஜன் தான் விஜய் சேதுபதி திரைப்படத்தை இயக்கினார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.