மிரள வைக்கும் விஜய் சேதுபதியின் மொத்தம் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.? ஷாக்கான ரசிகர்கள்

vijay-sethupathy
vijay-sethupathy

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பார்க்கப்படுபவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து ஹீரோ, வில்லனாக நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்பொழுது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஜவான்..

திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் கிறிஸ்மஸ் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனால் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருப்பதால் விஜய் சேதுபதி மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.  ஹிந்தியில் ஒரு படம் நடிக்க சுமார் 21 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.

அதே தமிழில் ஒரு படம் நடிக்க 8 கோடியில் இருந்து 10 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. அதுவும் வெப் சீரிஸ் என்றால் கிட்டதட்ட 50 கோடி வரை விஜய் சேதுபதி கேட்பதாக ஒரு தகவல் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. இதனால் விஜய் சேதுபதிக்கு திரும்புற பக்கம் எல்லாம் பணம் மழை தான்.

நாம் கடந்த சில தினங்களாக நடிகர் நடிகைகள் எவ்வளவு சுத்தி சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து பார்த்து வருகிறோம் அதன்படி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி திரை உலகிற்கு வந்த பிறகு எவ்வளவு சொத்து சேர்த்து உள்ளார் என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு சுமார் 110 கோடி இருக்கும் என தெரிய வருகிறது சென்னையில் அவருக்கு பல இடங்களில் பெரிய வீடு உள்ளது. சேத்துப்பட்டில் ஒரு புதிய வீடு சில வருடங்களுக்கு முன் வாங்கியிருந்தார் மேலும் பல லட்சம் மதிப்புள்ள பெரிய கார்களும் அவரிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிய அளவில் கிசுகிசுக்கப்படுகிறது.