பிரபல இயக்குனர் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகும் விஜய் சேதுபதியின் மகன்.! வெளிவந்த மாஸ் அப்டேட்..

vijay-sethupathi
vijay-sethupathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கடைக்கு வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழையும் தாண்டி தெலுங்கு என அடுத்தடுத்து பல மொழி திரைப்படங்களிடம் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவ்வாறு முதல் நடிகரான இவரின் மகன் தற்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக்கி வரும் படம் ஒன்றில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றிய  அதிகாரப்பூர்வமான தகவலும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. முன்னதாகவே சூர்யா சேதுபதி தனது அப்பாவுடன் இணைந்து நானும் ரவுடிதான் மற்றும் சிந்துபாத் ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறன் இயக்கத்தில் ஜெயமோகன் எழுதியுள்ள துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து விடுதலை என்ற பெயரில் திரைப்படம் உருவாகி வருகிறது.

இத்திரைப்படத்தை ஓர் ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிமாறன் இயக்கி வருகிறவர். ஈரோடு ,சத்தியமங்கலம் போன்ற அடர்ந்த காட்டுப்பகுதிகளில் செட் அமைக்கப்பட்டு மருத்துவ உதவிகளுடன் விடுதலை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் சூரி காமெடி கேரக்டரில் போலீசாக நடித்துள்ளார்.

கைதி கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ள நிலையில் விஜய் சேதுபதிக்கு வாத்தியார் என்ற கேரக்டரும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இளம் வயது விஜய் சேதுபதி கேரக்டரில் அவருடைய மகன் சூர்யா சேதுபதி நடிப்பதற்கு வெற்றிமாறன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் இத்திரைப்படத்தின் பட பிடிப்பு நடைபெற்று முடிவதற்கு வெற்றிமாறன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் படத்தின் ஹீரோவாக சூரி என்றும், கதையின் ஹீரோவாக விஜய் சேதுபதி என்றும் கூறியிருந்தார்.

இவ்வாறு பல எதிர்பார்ப்புகளுடன் இருந்து வரும் நீ திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்துள்ளார். எல்ரெட் குமார் கை தயாரிக்கிறார். தொடர்ந்து வட சென்னை,அசுரன் போன்ற வெற்றி படங்களின் வரிசையில் விடுதலை படம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சூர்யா நடிக்கும் வாடிவாசலில் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.