புஷ்பா 2 படத்தில் இணைந்த விஜய் சேதுபதி – சம்பளம் மட்டுமே இத்தனை கோடியா.! அண்ணாந்து பார்க்கும் தமிழ் சினிமா.

allu-arjun-and-vijay-sethupathi
allu-arjun-and-vijay-sethupathi

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு கிளாமர் சாங் இருக்கு சமந்தா அரைகுறை ஆடையில் நடனமாடி இருந்தார்

இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.  இந்த படம் அப்போது வெளியாகி 350 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் தமிழ்நாட்டில் தமிழ் நடிகர்களின் படங்கள் செய்யாத சாதனையை புஷ்பா திரைப்படம் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து இந்த புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் என இயக்குனர் கூறியதை எடுத்து ரசிகர்கள் பலரும் இரண்டாம் பாகத்திற்கு ஆவலாக இருந்து வந்தனர் சமீபத்தில் புஷ்பா 2 படத்திற்கான ஷூட்டிங்கும் நடந்து வருவதாக கூறப்பட்டது. இதிலும் ஹீரோவாக அல்லு அர்ஜுன் மற்றும் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் புஷ்பா 2 படத்தில் தமிழில் டாப் நடிகர்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து வரும் விஜய் சேதுபதி தான் புஷ்பா 2 படத்திலும் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம். இவர் புஷ்பா முதல் பாகத்திலே வில்லனாக நடிக்க இருந்தாராம் அப்பொழுது விஜய் சேதுபதி பல படங்களில் கமிட் ஆகி நடந்து வந்ததால் பின்பு புஷ்பா படத்தில் பகத் பாஸில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.

அதை தொடர்ந்து இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட்டாகியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி இதுவரை ஒரு படத்திற்கு 15 இல் இருந்து 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்ற நிலையில் புஷ்பா 2 படத்திற்காக விஜய் சேதுபதிக்கு  30 கோடி சம்பளமாக பேசப்பட்டு உள்ளதாம்.