ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களின் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பெற்று மேலும் மக்கள் செல்வன் என ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படுபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.மேலும் ஹீரோவாக நடித்து வந்த இவர் சமீப காலங்களாக தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து கலக்கி வருகிறார்.
அந்த வகையில் கடைசியாக உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பியிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் அடுத்ததாக பாலிவுட்டில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் அட்லி தற்பொழுது ஜவான் திரைப்படத்தினை பாலிவுட்டில் உருவாக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மேலும் தற்பொழுது இந்த திரைப்படத்தின் சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் அட்லி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் ஜவான் திரைப்படத்தில் தளபதி விஜய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் விரைவில் கலந்துகொள்ள இருக்கிறாராம் மேலும் விஜய் சேதுபதியும் ஷாருக்கான் பங்கேற்கும் காட்சிகள் சூட்டிங் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்பொழுது விஜய் சேதுபதி ஜவான் படத்திற்காக வாங்கும் சம்பளத்தை பற்றிய தகவல்தான் தற்பொழுது வெளியாகிவுள்ளது.
அதாவது 21 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார் என்றும் அவரது கேரியரில் இதுதான் அதிகபட்சம் சம்பளம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது பல முன்னணி நடிகர்களை விட விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் தான் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது இவ்வாறு விஜய் சேதுபதி விக்ரம் படத்திற்கு பிறகு தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி 21 கோடி பெறுகிறார்.