தமிழ் சினிமாவில் அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா போன்ற டாப் நடிகர்களை காட்டிலும் ஒரு வருடத்திற்கு அதிக படங்களில் கமிட்டாகி நடித்து வருவது விஜய் சேதுபதி தான். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வளம் வந்து கொண்டு இருந்தார். ஆனால் தற்போது அவருக்கு சினிமாவில் ஹீரோவை தாண்டி வில்லன் கதாபாத்திரத்திற்கு தான்..
அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது ரசிகர்களும் அதனையே விரும்புகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் சேதுபதி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை வெற்றிமாறன் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எடுத்து வருகிறார்.
இருந்தும் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை மேலும் படத்தை இரண்டு பாகங்களாக வெற்றி மாறன் எடுத்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு விஜய் சேதுபதி இடம் ஆரம்பத்தில் எட்டு நாள் கால் சீட்டு மட்டுமே கேட்கப்பட்டது. அதனால் அப்போது விஜய் சேதுபதி ஓகே சொல்லி நடித்து..
வந்த நிலையில் தற்போது எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகளில் வெற்றிமாறனுக்கு திருப்தி இல்லாததால் அதில் சில மாற்றங்களை கொண்டு வர மீண்டும் விஜய் சேதுபதியிடம் 30 நாள் கால் சீட் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு விஜய் சேதுபதியோ நான் எவ்வளவு பிசி என்று உங்களுக்கு தெரியும்.
நீங்கள் இந்த படத்தை இழுத்துக் கொண்டே செல்கிறீர்கள் அவ்வளவு நாள் கால் ஷீட் என்னால் கொடுக்க முடியாது என இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனராம். பின்பு விஜய் சேதுபதி 30 நாள் கால் ஷிட் வேண்டும் என்றால் அதற்கு டபுள் சம்பளம் தரவேண்டும் என கரராக பேசி உள்ளார். அப்படி அவருக்கு கொடுத்தால் படத்தின் பட்ஜெட் தான் அதிகரிக்கும்.