விஜய் சேதுபதியை ஓரம் கட்ட கமல் எடுத்த புதிய அவதாரம்.? ஆண்டவரே இது காசுக்காகவா..

actor kamal
actor kamal

Kamal : உலக நாயகன் கமலஹாசன் கடைசியாக நடித்த விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது சம்பளத்தை உயர்த்திக்கொண்டு அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதுவரை கிடப்பில் இருந்த இந்தியன் 2 திரைப்படத்தை தூசு தட்டி அதில் நடித்து முடித்துள்ளார் அடுத்து ஹெச். வினோத் உடன்  படம், மணிரத்தினத்துடன் ஒரு படம், லோகேஷ் உடன் ஒரு படம் பண்ணா இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகிய நிலையில் திடீரென நாக் அஸ்வின் சொன்ன கல்கி  2829 என்ற திரைப்படத்தில் திடீரென ஒப்பந்தமானார்.

அதை உறுதிப்படுத்தும் கல்கி படத்தில் இருந்து கமலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியானது. இந்த நிலையில் கல்கி படத்தில் வில்லனாக நடிக்க என்ன காரணம் என்பது குறித்து கமல் வெளிப்படையாக பேசி உள்ளார் அவர் சொன்னது.. கல்கி படத்தில் வில்லனாக நடிக்கிறேன்.

இதில் கதாநாயகனுக்கு எவ்வளவு முக்கியம் இருக்குமோ அதே அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கு கல்கி படத்தில் நான் நடிக்கிறேன் என்றதும் யாரும் நம்பவே இல்லை ஆயிரம் ஆண்டுகளாக நாம் புராணங்கள் பின்பற்றி வருகிறோம் அந்த புராணங்களின் பெருமையை பறைசாற்றுவதற்காகவே நாக் அஸ்வின் இந்த படத்தை எடுக்கிறார்.

நானும் இதில் சந்தோஷமாக நடிக்கிறேன் ஒரு படத்திற்கு ஹீரோ எவ்வளவு முக்கியமோ, வில்லனும் அந்த அளவுக்கு முக்கியம் அதனால் தான் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டேன் என கமல் கூறி உள்ளார். இந்த படத்திற்கு அவர் 150 கோடி சம்பளமும் ஒரு காரணம் என பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஒரு சிலர் விஜய் சேதுபதிக்கு போட்டியா எனவும் கூறிவருகின்றனர்.