நேரத்தால் வந்த வினை..! தியேட்டரில் வெளிவர முடியாமல் அந்தரத்தில் தவிக்கும் விஜய் சேதுபதியின் திரைப்படம்..!

vijaysethupathi-1
vijaysethupathi-1

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று போற்றப்படுபவர் தான் நடிகர் விஜயசேதுபதி இவர் தற்சமயம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் ஒரே நேரத்தில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

என்னதான் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் சரியான கதையம்சம் உள்ள திரைப்படத்தை தேர்வு செய்ய மறந்துவிட்டார் அந்த வகையில் இவர் சமீபத்தில் நடித்து வெளியான மூன்று திரைப்படங்களும் தொடர் தோல்வியை கொடுத்து அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இனிமேல் திரைப்படத்தின் எண்ணிக்கையை பார்க்காதீர்கள் திரைப்படத்தின் கதையை கவனியுங்கள் என்று விஜய்சேதுபதிக்கு அறிவுரை கூறுவது மட்டுமில்லாமல் தற்போது விஜய்சேதுபதி யாதும் ஊரே யாவரும் கேளிர் மாமனிதன் காத்துவாக்குல 2 காதல் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்

அது மட்டுமில்லாமல் நடிகர் விஜய் சேதுபதி முகில் என்ற ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரெஜினா மற்றும் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா ஆகிய அனைவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

mukizh-1
mukizh-1

இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தை விஜய்சேதுபதி தான் தயாரித்து வருகிறார்கள் இந்நிலையில் இத்திரைப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிடலாம் என பிளான் போட்ட நிலையில் இத்திரைப்படம் வேறு 60 நிமிடங்கள் என்பதன் காரணமாக இத் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட்டால் நேரத்தில் கோளாறுகள் ஏற்படும். ஆகையால் இத் திரைப்படமானது ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.