விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படம் – முதல் நாளில் எவ்வளவு வசூலித்தது தெரியுமா.?

vijay sethupathi
vijay sethupathi

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இவரும் ஒரு தவிர்க்க முடியாத ஹீரோவாக மாறியுள்ளார். பல நடிகர்கள் ஹீரோவான பின்பு குணச்சித்திர கதாபாத்திரம் வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள்.

அப்படி நடித்தால் தனது மார்க்கெட் குறைந்துவிடும் என நினைப்பார்கள் ஆனால் அதற்கு எதிர்மாறாக விஜய்சேதுபதி நல்ல கதையம்சம் உள்ள படங்களில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னை அர்ப்பணித்து நடித்து படத்தை சிறப்பிப்பது வழக்கம். அதுபோல் தற்போது விஜய்சேதுபதி சினிமாவில் வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் ஹீரோ என பல ரோல்களில் நடித்து வருகிறார்.

இருந்தாலும் ரசிகர் மத்தியில் ஒரு தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து நல்ல வசூல் வேட்டை நடத்தி வரும் விக்ரம் திரைப்படத்தில் சந்தானம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்த அசத்தியிருந்தார்

இவரது நடிப்பு இந்த படத்தில் வேற லெவலில் இருந்தது அதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வந்தனர் இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் என்னும் படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்திருந்தார்

படம் ஒரு குடும்ப கதையாக உருவாகி இருந்த நிலையில் நேற்று இந்தப் படம் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடி வருகின்றது. மாமனிதன் படம் முதல் நாள் தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.