விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படம் – 3 நாளில் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா.?

mamanithan
mamanithan

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹீரோ வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு நிலையாக இருப்பவர் விஜய் சேதுபதி இவர் வில்லனாக நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்துள்ளன .

ஆனால் இவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் வசூல் ரீதியாக கோட்டைவிட்டு உள்ளன. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படங்களிலேயே காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தான் ஒரு சுமாரான வசூலை அள்ளியது அதன் பிறகு வெளிவந்த மாமனிதன் திரைப்படம் சிறப்பாக இருந்தாலும் வசூல் வேட்டையை நடத்த தவறி உள்ளது என கூறப்படுகிறது

முதல் நாளில் மாமனிதன் திரைப்படம் சுமார் ஒரு கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாமனிதன் படம் ரிலீஸ் ஆகி தற்போது வரை மூன்று நாட்கள் முடிந்து உள்ளது இது வரை மட்டுமே படம் சுமார் 4.5 கோடி தான் வசூல் செய்துள்ளதாம். இதனால் மாமனிதன் படக்குழு போட்ட படத்தின் பட்ஜெட்டை எடுக்குமா எடுக்காத என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இருப்பினும் இந்த படம் இல்லத்தரசிகளுக்கு ரொம்ப பிடித்து போய் உள்ளதால் வருகின்ற நாட்களில் இந்த படத்திற்கான வசூல் நல்லபடியாக ஏறும் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி தொடர்ந்து ஹீரோ வில்லன் என மாறி மாறி நடித்து வந்தாலும் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம் தான் தற்போது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் பிடித்துப் போயிருக்கிறது.

இப்படியே போய்க்கொண்டிருந்தால் முழுநேர வில்லனாக மாறி விடுவார் இதிலிருந்து அவர் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து ஹீரோவாக நடித்து வெற்றியை ருசிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.