“விடுதலை” படத்தில் விஜய் சேதுபதியின் “மகன்” – எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா.?

vijay-sethupathy

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் குணசேத்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் நடிப்பது வழக்கம் அந்த வகையில் அண்மை காலமாக ஹீரோவாக நடிப்பதையும் தாண்டி வில்லன் மற்றும் கெஸ்ட் ரோலில் நடித்து தனது மார்க்கத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தி உள்ளார்.

அண்மையில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் வேற லெவலில் மிரட்டி இருந்தார் அதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படத்திலும் வில்லனாக கமிட்டாகி உள்ளார்.

ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் தமிழில் விஜய் சேதுபதி விக்ரம் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்திலும் நடித்துள்ளார் இந்த படம்  இரண்டு பாகங்களாக எடுக்கப்படுகிறது முதல் பாகம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்த படம் முழுக்க முழுக்க காடு மலை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க மலைவாழ் மக்களுக்கு காவல்துறையால் நேரும் இன்னல்கள் குறித்த கதைகளாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி இந்த படத்தில் போராளியாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி சூரி ஆகியவர்களை தொடர்ந்து படத்தில் விஜய் சேதுபதியின் மகன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

விஜய் சேதுபதியின் மகன் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றால் மலைவாழ் சிறுவனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது முன்னதாக நானும் ரவுடிதான், சிந்து பாத்து படங்களில் விஜய் சேதுபதி உடன் அவரது மகன் திரை உலகில் நடித்து அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay-sethupathy
vijay-sethupathy