ரசிகர்களை குதூகலப்படுத்த ஒரே நாளில் விஜய் சேதுபதியின் 2 படங்கள் ரீலிஸ்.! ஒன்னொன்னும் நின்னு பேசும்.

vijay sethupathy
vijay sethupathy

நடிகர் விஜய் சேதுபதி சினிமா உலகில் முதலில் சம்பாதிக்க தான் உள்ளே நுழைந்தார் ஆனால் காலம் போகப்போக தனது திறமையை வெளி காட்டி குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது திறமையை அழகாக காட்டி பின் ஒரு கட்டத்தில் ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்தார்.

அதன் பிறகு ஒரு சில படங்களில் வில்லனாகவும் மிரட்டினார். அதன் விளைவாகவே நடிகர் விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தனக்கான மார்க்கெட் மிகப்பெரிய அளவில் இருப்பதை உணர்ந்து கொண்ட விஜய் சேதுபதி உடனடியாக தனது சம்பளத்தையும் தாறுமாறாக உயர்த்தி நடித்து வருகிறாராம்.

ஹீரோ என்றால் ஒரு சம்பளம் வில்லன் என்றால் ஒரு சம்பளம் வாங்கி அசத்தி வருகிறார். இப்பொழுது கூட நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக காத்து வாக்குல 2 காதல் திரைப்படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகியோர் உடன் கை கோர்த்தது நடித்துள்ளார் இந்த படத்தை விக்னேஷ் சிவன் சிறப்பாக எடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி வில்லனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி தமிழில் ஹீரோ வில்லனாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தி இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவல் கிடைத்துள்ளது அதாவது இவர் நடிப்பில் உருவாகியுள்ள..

காத்து வாங்குல இரண்டு காதல் திரைப்படம் ஒரு வழியாக வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது அதே போல கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படமும் அதே தேதியில் ரிலீஸ் ஆவதால் ஒரே நாளில் விஜய் சேதுபதியின் இரண்டு திரைப்படங்கள் வெளிவருவது மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதமாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.