புஷ்பா 2 படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி.? படக்குழு போட்ட கண்டிஷன் தான் காரணமா..

vijay-sethupathy-
vijay-sethupathy-

தமிழ் சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய் சேதுபதி இவர் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் போன்றவற்றிலும் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி உள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான  விக்ரம் திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

மேலும் அந்த படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வளம் வந்து கொண்டிருக்கிறார் குறிப்பாக ஹிந்தியில் இவருக்கு மவுசு தற்போது அதிகரித்துள்ளது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இது தவிர ஹிந்தியில் இரண்டு மூன்று படங்களில் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது அதே போல தெலுங்கிலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் அதிரடியாக உருவாகி வருகிறது.

இந்த படத்திலும் விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது மேலும் பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக ஒரு புதிய படத்திலும் தெலுங்கில் ஒரு புதிய படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். ஆனால் தனது சம்பளத்தை தற்போது சற்று உயர்த்தி நடித்து வருவதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் புஷ்பா 2 திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அதற்கான காரணமும் கூறப்படுகிறது புஷ்பா 2 தமிழ் தெலுங்கு மொழிகளில் மட்டும் வில்லனாக நடிக்குமாறு ஹிந்தியில் அந்த கேரக்டரில் மனோஜ் வாஜ்பாய் நடிக்க உள்ளதாகவும் கூறினார் இது விஜய் சேதுபதிக்கு உடன்பாடு இல்லாமல் போனதால் அவர் இந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.