நடிகர் விஜய்சேதுபதி சினிமா உலகில் தற்போது ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் சினிமாவில் தவிர்க்கமுடியாத ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்து உள்ளார் மேலும் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படவாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் தற்பொழுது சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்தி செம்ம மாஸ் காட்டி கொண்டு வருகிறார் இருப்பினும் இவர் மீது நம்பிக்கை வைத்து இயக்குனரும், தயாரிப்பாளரும் தற்போது வாய்ப்பு கொடுக்கின்றனர்.
மேலும் சினிமாவை தாண்டி போதாத குறைக்கு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பப்படும் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியும் சிறப்பாக தொகுத்து வழங்கி காசு பார்த்து வருகிறார். இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம்மையாக மாட்டி உள்ளார். காரணம் 2017 ஆம் ஆண்டு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மத்திய அரசு தேசிய விருது கொடுத்தால் வாங்குவீர்களா என கேட்டனர் அதற்கு இப்போதான் நீட் தேர்வில் ஒரு உயிரை கொடுத்துள்ளோம்.
அது மட்டுமல்லாமல் இந்தி திணிப்பு என ஏகப்பட்ட சிக்கல் வந்துள்ளது இப்படி இருக்கின்ற நேரத்தில் தேசிய விருதை கொடுத்தால் நான் வாங்கமாட்டேன் எனக் விஜய் சேதுபதி கூறியிருந்தார். இப்படி சொல்லியே இவர் சில நாட்களுக்கு முன்பு எல்லாவற்றையும் மறந்துவிட்டு இவர் தேசிய விருது வாங்கினார்.
இதை அறிந்த ரசிகர்கள் இப்ப நீட்தேர்வு பிரச்சனை இல்லையா.. மேலும் நீங்க சொன்ன பிரச்சனை எல்லாம் இருக்கு ஆனால் எதை நினைத்து போய் நீங்க விருது வாங்கு நீங்க.. சொன்னது மறந்து விட்டீர்களா என கூறி தற்போது ரசிகர்கள் விஜய் சேதுபதியை விமர்சித்து வருகின்றனர். அவரை கலாய்க்கும் தொடங்கியுள்ளனர்.