புஷ்பா 2 படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதி..! அவருக்கு ஜோடி இந்த நடிகையா.? வெளிவந்த புதிய அப்டேட்.!

puspa
puspa

தெலுங்கில் சமிப காலமாக பிரமாண்ட செலவில் பல படங்கள் எடுக்கப்பட்டு பெரிய வெற்றியை பெறுகின்றன. அந்த வகையில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் உலக அளவில் வெளியாகி அனைத்து மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம் அப்போது எதிர்பார்க்காத அளவு வசூல் வேட்டையும் நடத்தியது.

என்பது குறிப்பிடத்தக்கது. புஷ்பா படம் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருக்குமே அவர்களது கேரியரில் திருப்புமுனை படமாக அமைந்தது. மேலும் இவர்களை தொடர்ந்த புஷ்பா படத்தில் ஒரு குத்து சாங் இருக்கு சமந்தா கிளாமர் நடனம் ஆடி இருந்தார். அவரது நடனத்தின் மூலம் பல ரசிகர்களை கட்டி இழுத்தார்.

இந்தப் பாடல் மூலம் சமந்தாவின் மார்க்கெட்டும் பெரிய அளவில் எரியது. இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது அதிலும் ஹீரோவாக அல்லு அர்ஜுன் மற்றும் ஹீரோயின்னாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றனர். புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு காடு மலை போன்ற இடங்களில் மிக கடினமாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தில் பல முக்கிய நடிகர் நடிகைகளும் நடித்து வருகின்ற நிலையில் தமிழில் டாப் நடிகர்களின் படங்களில் வில்லனாக மிரட்டி வரும் விஜய் சேதுபதியை புஷ்பா 2 படத்தில் கமிட் செய்ய பட குழு முடிவு செய்துள்ளது. அதற்காக ஒரு பெரிய தொகையை கொடுத்து அவரை புக் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. அதன்படி இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரியாமணி நடிக்க உள்ளாராம். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை இருந்தாலும் புஷ்பா 2 படம் குறித்து அவ்வப்போது சில தகவல்கள் கசிந்த வண்ணமே இருக்கின்றன.