கமலை தொடர்ந்து மற்றொரு டாப் ஹீரோவை நடுங்க வைக்க.. களத்தில் இறங்கும் விஜய் சேதுபதி.! எகிற போகும் மார்க்கெட்.

vijay-sethupathy-
vijay-sethupathy-

அண்மைக்காலமாக நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதையும் தாண்டி வில்லனாக நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து அசத்திருப்பார் இதை தொடர்ந்து அண்மையில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்திலும்..

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பின்னி பெடல் எடுத்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் அண்மையில் சினு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து இருந்த திரைப்படம் மாமனிதன்.

இந்த படம் சொல்லிக் கொள்ளும்படி இவருக்கு பெரியளவு வரவேற்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து விஜய் சேதுபதி பல படங்களில் டாப் ஹீரோகளுக்கு வில்லனாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஆம் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாக உள்ள இந்தியன் 2 திரைப்படத்திலும் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்க உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் ஹிந்தியில் முதல் முறையாக இயக்குனர் அட்லி ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, தீபிகா படுகோன் போன்ற பல முன்னணி  நட்சத்திரங்கள்..

நடித்து வருகின்ற நிலையில் இந்தப் படத்திலும் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இதற்காக விஜய் சேதுபதி இடம் பேச்சுவார்த்தை சம்பள விஷயம் போன்ற அனைத்தும் பேசி முடித்ததாக தெரிவிக்கின்றன.