குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் தொடர்ந்து ஹீரோவாக வெற்றி படங்களை கொடுத்து ஓடியவர் விஜய்சேதுபதி இருந்தாலும் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் சின்ன சின்ன ரோல்களில் நடித்து மக்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.
இதனால் நாளுக்கு நாள் விஜய் சேதுபதியின் சினிமா மார்க்கெட் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது இருப்பினும் அண்மை காலமாக இவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் சொல்லிக்கொள்ளும்படி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது கிடையாது.
ஹீரோவாக நடிப்பதை விட சின்ன சின்ன ரோல்கள் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு வேற லெவலில் இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த படங்கள் நல்ல வசூலிக்கின்றன ஆனால் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்த படம் பெரிய வசூல் வேட்டை எந்த ஒரு திரைப்படமும் நடத்தியது கிடையாது அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து தோல்விப் படங்களையும் கொடுத்துள்ளார் அப்படித்தான் நடிகர் கிருஷ்ணாவும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்த திரைப்படம் தான் வன்மம்.
இந்த படத்தை ஜெய் கிருஷ்ணா இயக்கியிருந்தார் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாததால் படம் படுதோல்வியை அடைந்தது இந்த படத்தின் தோல்விக்கான காரணம் சமீபத்தில் இயக்குனர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது தோல்விக்கான காரணம் நான்தான்.
மற்ற நடிகர்கள் அவர்கள் வேலையை சரியாக செய்தார்கள் என்று கூறினார் மேலும் அவர் கூறுகையில் விஜய்சேதுபதி என்னைப் பார்த்தாலே பயப்படுவார் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறேன் ஆனால் கால்ஷீட் கேட்காதீர்கள் என்று கூறுவாராம் ஒருவேளை படம் தோல்வி அடைந்ததை மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறாரா என்று தெரியவில்லை ஆனாலும் அவர் ஏகப்பட்ட தேதிகளில் கமிட்டாகி இருந்தார் என்றும் ஜெய் கிருஷ்ணா கூறினார்.