தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மக்கள் செல்வன் என்ற அடைமொழியுடன் வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் வருடத்திற்கு ஒரு டஜன் திரைப்படங்களில் நடித்து ரிலீஸ் செய்வார். அதுமட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் நடித்தாலும் அனைத்து திரைப்படங்களும் பார்க்கும்படி அமைந்தது.
விஜய் சேதுபதி தன்னுடைய சகஜமான நடிப்பால் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுவிட்டார். இந்த நிலையில் ரசிகர்கள் சக நண்பர்கள் என அனைவரிடமும் மிகவும் எளிமையாக பழகக்கூடியவர்.
சாதாரணமாகவும் எதார்த்தமாகவும் பழகுபவர்களில் விஜய் சேதுபதி நம்பர் ஒன்று எனவும் கூறலாம். மேலும் விஜயசேதுபதியின் வாரிசான மகள் மற்றும் மகன் இருவரும் சினிமாவில் நடிப்பதற்கு வந்துவிட்டார்கள்.
விஜய் சேதுபதியின் மகன் மற்றும் மகளை பலரும் பார்த்திருப்பீர்கள் ஆனால் அவரின் மனைவியை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் வெளியுலகத்திற்கு அவ்வளவாக தனது மனைவியை அறிமுகப்படுத்தியது கிடையாது விஜய் சேதுபதி.
இந்த நிலையில் தன்னுடைய மனைவியுடன் முதன்முறையாக செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.