சேதுபதியாக வெற்றி பெற்ற விஜய் சேதுபதி டிஎஸ்பியாக வெற்றி பெறுவாரா.? ட்விட்டர் விமர்சனம்

DSP
DSP

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தற்போது பொன்ராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள டிஎஸ்பி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக புதுமுக நடையை அனுகீர்த்தி நடித்துள்ளார்.

சேதுபதி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதி டிஎஸ்பி திரைப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் குக் வித் கோமாளி புகழ் நடித்துள்ளார் மேலும் சிவானியம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள் twitter பக்கத்தில் தங்களுடைய விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர் அதைப்பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

அதன்படி ஒரு நொட்டிசன் போட்டு உள்ள டுவிட்டில் டிஎஸ்பி படத்தில் விஜய் சேதுபதி சேதுபதியை போல் இல்லை அதுமட்டுமல்லாமல் போலீஸ் கெட்டப் அவருக்கு செட் ஆகவில்லை என்று கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் இசை நன்றாக உள்ளது ஆனால் சில பிஜிஎம் இந்த படத்தில் வொர்க் அவுட் ஆகவில்லை என்று கூறியுள்ளார்.

மற்றொரு நொடிசன் டிஎஸ்பி மாஸாக இருந்தது ஆனால் முதல் பாதியும் பழைய பார்முலாவை தான் யூஸ் செய்து இருக்கிறார்கள். விஜய் சேதுபதி வழக்கமான நடிப்பை வெளிகாட்டி ஆற்றல் மிக்க நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஹரி போல் விறுவிறுப்பான போலீஸ் கதையை எடுக்க நினைத்து தோற்றுள்ளார் பொன்ராம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு நெட்டிசன் டிஎஸ்பி படத்தில் விஜய் சேதுபதி நன்றாக நடித்துள்ளார் இசையும் அருமையாக இருக்கிறது ஒளிப்பதிவும் சூப்பராக இருக்கிறது அது மட்டுமல்லாமல் ஆங்காங்கே நடக்கும் காமெடி ஓரளவு ஒர்க்கவுட் ஆகி உள்ளது ஆனால் இந்த படத்தின் கதை எடுப்படியாகவில்லை இதனால் நான் ஏமாற்றம் அடைந்தேன் என பதிவிட்டு இருக்கிறார்.

மேற்கண்ட விமர்சனங்களின் போது டிஎஸ்பி திரைப்படம் சுமாராக இருந்துள்ளதாக நெட்டிசங்கள் கூறியுள்ளனர்.