தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வரும் நடிகர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இவர் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது.
மேலும் விஜய் சேதுபதி கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் அவ்வபொழுது வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று தொடர்ந்து பல மொழி திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான லாபம் மற்றும் துக்ளக் தர்பார் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்தது துக்ளக் தர்பார் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகி மக்களிடையே வைரலானது ஆனால் லாபம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக ஓரளவுக்கு வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி தற்போது நிறைய திரைப்படங்களை கைப்பற்றி விட்டதால் நாள் தோறும் நடித்து கொண்டே வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் மும்பையில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பொழுது அங்கு இருந்த ரசிகர்கள் இவரை சுற்றி வளைத்து விட்டார்கள்.
அப்போது விஜய் சேதுபதி என்ன செய்வது என்று தெரியாமல் வழிவிடுங்க ப்ளீஸ் என ரசிகர்களிடம் பாவமாக பேசி எப்படியோ தப்பித்து வந்துவிட்டாராம் இந்த தகவல் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.