தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது வில்லன் என்ற புது அவதாரத்தை எடுத்து அதில் கலக்கி வருகிறார்.
இவர் தற்பொழுது தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களிலும் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த வகையில் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து மூன்றே நாட்களில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் உப்பெண்ணா இப்படம் விஜய் சேதுபதிக்கு புகழை வாங்கி தந்தது.
இப்படம் தமிழில் ரீமேக்காகவுள்ளதாகவும் படத்தில் விஜய்யின் மகனை வைத்து எடுக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது.அதுமட்டுமல்லாமல் இப்படத்தை தமிழில் விஜய் சேதுபதி தான் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது ஆனால் இன்னும் அதிகாரபூர்வமான தகவல் வெளிவரவில்லை.
விஜய் சேதுபதி தற்போது ஆறு மாதத்தில் மட்டும் ஹாலிவுட்டில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது தமிழில் சூரி கதாநாயகனாக அறிமுகமாக உள்ள படத்தில் விஜய் சேதுபதி சூரிக்கு தந்தையாக நடிக்க கமிட்டாகி உள்ளாராம்.
இப்படம் துணைவன் என்ற நாவலை மையமாக வைத்து ஜெயமோகன் உருவாக்க உள்ளாராம். இப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார். இதனை தொடர்ந்து சூரிக்கு பாரதிராஜா தான் முதலில் தந்தையாக நடிக்க கமிட்டாகி இருந்தாராம்.
ஆனால் விஜய் சேதுபதி சூது கவ்வும் மற்றும் ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்களில் வயதான தோற்றத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் விஜய்சேதுபதியை தற்பொழுது கமிட் செய்துள்ளார்கள். சூரிக்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரே வயதுதான் ஆகும் என் விஜய் சேதுபதி அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆனார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.