“சந்தானம்” கதாபாத்திரத்தில் பயந்துகொண்டே நடித்த விஜய் சேதுபதி – உள்ளே மறைந்து இருக்கும் விஷயம்.!

santhanam-
santhanam-

தமிழ் சினிமா படங்களில் ஆரம்பத்தில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின்பு தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. இந்த படத்தை தொடர்ந்து சூதுகவ்வும், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் போன்ற படங்களில் நடித்து வெற்றி கண்டு வந்தாலும்..

தொடர்ந்து ஹீரோவாக தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் போன்ற சிறப்பான ரோல்களில் நடித்து தற்போது வரை மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்து வருகிறார். மேலும் விஜய்சேதுபதிக்கு ஹீரோவை விட வில்லன் கதாபாத்திரம் தான் சிறப்பாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர் அந்த வகையில் டாப் நடிகர்களுக்கு நிகராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி வருகிறார்.

குறிப்பாக பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக, மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து புகழ் பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப் படத்திலும் வில்லனாக சந்தானம் கதாபாத்திரத்தில் அடித்து மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு மக்கள் பலரும் பாராட்டும்படி அமைந்தது.

இந்த நிலையில் விக்ரம் படத்தில் சந்தானம் கதாபாத்திரத்தின் என்ட்ரி சீனில் நடிக்க விஜய்சேதுபதி பயந்து நடித்துள்ளாராம். இதைப்பற்றி அவர் கூறியதை விலாவரியாக பார்ப்போம்.  விக்ரம்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னிடம் என்ட்ரி சீனில் சட்டை இல்லாமல் நடிக்க வேண்டும் என கூறினார் ஆனால் சட்டை இல்லாமல் தொப்பையுடன் நடித்தால் ரசிகர்கள் கிண்டல் அடித்து விடுவார்கள் என பயந்தேன்.

பின்பு லோகேஷ் இடம் பனியில் அணிந்தபடி  நடிக்கலாமா என கேட்டேன் அவர் சட்டை இன்றி நடித்தால்தான் அந்த காட்சி சிறப்பாக இருக்கும் எனக் கூறியதை அடுத்து இயக்குனரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக அந்த காட்சியில் சட்டை இல்லாமல் நடித்தேன். பின்பு படம் ரிலீஸ் ஆனதும் ரசிகர்கள் கிண்டல் அடிப்பார்கள் என எதிர்பார்த்தேன் ஆனால் ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டு சந்தோஷத்தோடு அந்த கதாபாத்திரத்தை வரவேற்றனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.