தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் குணசித்திர கதாபாத்திரம் மற்றும் கெஸ்ட் ரோல் என அனைத்திலும் நடித்து வெற்றி கண்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இதன் விளைவாகவே தற்போது தமிழையும் தாண்டி தெலுங்கு மொழியிலும் நல்ல வரவேற்பு விஜய்சேதுபதிக்கு இருந்து வருகிறது.
இதனால் தனது சம்பளத்தை உடனடியாக உயர்த்தியுள்ளார். இருப்பினும் பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. விஜய் சேதுபதி புதிய படவாய்ப்புகளை கைபற்றி நடித்தாலும் மறுபக்கம் சீரியல் மற்றும் டிவி நிகழ்ச்சிகளிலும் தன்னை வெளிக்காட்ட ரெடியாக இருக்கிறார்.
அந்த வகையில் சன்டிவி தொலைக்காட்சியில் வெளிவர இருக்கும் மாஸ்டர் செஃப் என்று நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியிருக்கிறார் இப்படி ஓடிக்கொண்டு இருக்கும் இவர் திரில்லர் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் ஒரு புதிய திரில்லர் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
அந்த படம் வேறு ஏதுமில்லை மிஸ்கின் இயக்கத்தில் அண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு இரண்டாம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளாராம் விஜய்சேதுபதி. இதுவரை பேய் படங்களில் நடிக்காமல் இருந்து உள்ள விஜய் சேதுபதி தற்போது இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் அவரது ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாட ரெடியாக இருக்கின்றனர்.
இச்செய்தியை தற்போது விஜய்சேதுபதி ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.