நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் மறுபக்கம் வில்லன், கெஸ்ட் ரோல் குணச்சிதர கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலம் அடைந்தார் ஒரு கட்டத்தில் இவருக்கு வில்லன் கதாபாத்திரம் சூப்பராக பொருந்தியது. ஒரு கட்டத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய் போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்து பிரபலமடைந்தார்.
அதன் காரணமாக பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அதன் பின் தமிழை தாண்டி பாலிவுட், டோலிவுட் போன்றவற்றில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது ஏன் அண்மையில் கூட தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் கூட வில்லன் சந்தானம் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது ஏகப்பட்ட வாய்ப்புகள். ஹிந்தியில் மட்டுமே மூன்று, நான்கு படங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது முதலாவதாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடிக்கிறார் இதற்காக அவர் சுமார் 35 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஏற்கனவே வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா இதன் இரண்டாவது பாகம் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது இந்த படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதற்காக சுமார் 25 கோடி சம்பளம் வாங்க இருக்கிறாராம்.
மேலும் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணா நடிப்பில் ஒரு புதிய படத்திலும் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றது இந்த படத்திற்காக அவர் சுமார் 25 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த மூன்று படத்தில் நடிப்பதற்கு மட்டுமே விஜய் சேதுபதி 80 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் விஜய் சேதுபதியின் திறமை எப்படி உயர்கிறதோ அதே போல அவரது மார்க்கெட்டும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.