நடிகை கத்ரீனா கைஃப் உடன் ஜோடி சேர்ந்த விஜய் சேதுபதி – ரசிகர்கள் மத்தியில் வேகம் எடுக்கும் புதிய புகைப்படம்.!

vijay-sethupathy-
vijay-sethupathy-

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். தற்பொழுது சினிமா உலகில் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் கெஸ்டு ரோல் என எதுவாக இருந்தாலும் தயங்காமல் நடித்து வருவதால் அவரது மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டி உள்ளது மேலும் தனது வளர்ச்சிக்கு ஏற்றார் போல சம்பளத்தையும் அதிகமாக வாங்கி வருகிறார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி கடைசியாக கமலின் விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதனைத் தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படத்திலும் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

புஷ்பா 2 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க மட்டுமே விஜய் சேதுபதி சுமார் 30 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக ஒரு பக்கம் தகவல் வெளியாகி உள்ளது சம்பளம் எவ்வளவாக இருந்தாலும் அவருக்கான வாய்ப்புகள் மட்டும் குறைந்தபாடு இல்லாமல் வந்து கொண்டு தான் இருக்கிறது ஹிந்தியில் கூட இரண்டு மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் மேலும் தென்னிந்திய உலகம் முழுவதும் ஏகப்பட்ட வாய்ப்புகள்.

இப்படி இருக்கின்ற நிலையில் ஹிந்தியில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மேரி கிறிஸ்மஸ் இந்த படம் மக்கள் மத்தியில் தற்போது பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கிறது காரணம் ஒரு பக்கம் விஜய் சேதுபதி மறுபக்கம் ஒல்லி பெல்லி நடிகை கத்ரினா கைஃப்பும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் சேதுபதி மற்றும் நடிகை கத்ரீனா கைஃப் இருவரும் ஒரு காட்சிக்காக தயாராகி வரும் பொழுது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

vijay-sethupathy-
vijay-sethupathy-