வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் மெகா ஹிட் திரைபடத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது விஜய் சேதுபதி தான்.! வெற்றிமாறன் கூறிய தகவல்.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. இந்த நிலையில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் முதன்முதலாக பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இணைந்தார்கள் அதனைத்தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன், என தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்தார்கள்.

இந்த நிலையில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது. இந்த நிலையில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் தான் வடசென்னை இந்த திரைப்படத்தில் தனுசுடன் இணைந்து அமீர், ஆண்ட்ரியா ,சமுத்திரகனி டேனியல் பாலாஜி, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வடசென்னை திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவலை பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் கூறியுள்ளார். உண்மையான  கதையை மையமாக வைத்து படங்களை இயக்கி வெற்றி கொண்டு வருபவர் வெற்றிமாறன். இவர்  இயக்கத்தில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இவர் காமெடி நடிகர் சூரி வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் சத்தியமங்கலம்   காட்டுப் பகுதியில் நடைபெற்று வந்தது இதன் படபிடிப்பு.  இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் சூரி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து புதிய திரைப்படத்தை உருவாக்க இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன் இந்த திரைப்படத்தில் சூர்யா நடிகராகவும் நடிக்க இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் சூர்யா நிஜ காளைகளை அடக்கும் விதமாக சில காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது.

ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசம் காட்டி வரும் வெற்றிமாறன் வடசென்னை திரைப்படத்தில் வித்தியாசத்தை காட்டி உண்மையாக நடந்தது போல் தத்துரூபமாக காட்டியுள்ளார். திரைப்படத்தில் முதன் முதலில் விஜய்சேதுபதி நடிக்க இருந்தார் அவரிடம் கதையை கூறியபோது ஓகே கூறிவிட்டார் ஆனால் படப்பிடிப்புக்கு சென்ற பொழுது கால்ஷீட் காரணமாக வடசென்னை படத்தில் விஜய்சேதுபதி நடிக்க முடியாமல் போனது.

அதன்பிறகு ராஜன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ரவி தேஜாவை நடிக்க வைப்பதற்கு அனுகியுள்ளார் அப்பொழுது அவருக்கு கால் சீட் பிரச்சனை இருந்ததால் இறுதியாக அந்த கதாபாத்திரத்தில் அமீரை நடிக்க வைத்தார். அவர் நடித்து மிகப் பெரிய வெற்றி அடைந்தது அதேபோல் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து மாபெரும் வெற்றியை நிலைநாட்டியது இதனை சமீபத்தில் வெற்றிமாறன் பிரபல தனியார் யூடியூப் சேனலில் பேட்டியில் கூறியுள்ளார்.