ஹிட் அடித்த சூது கவ்வும் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா?

SOODHU KAVVUM
SOODHU KAVVUM

Soodhu Kavvum: சூது கவ்வும் திரைப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி கேரக்டரில் வேறு ஒரு காமெடி ஹீரோ தான் நடிக்க இருந்தாராம். ஆனால் சில காரணங்களால் அந்த நடிகரால் நடிக்க முடியாலம் போக பிறகு விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை தந்து முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.

ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து கலக்கி வரும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். 2013ஆம் ஆண்டு நலன்குமார் சாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க வெளியான திரைப்படம் தான் சூது கவ்வும். பிளாக்பஸ்டர் ஹிட் படமாக உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

மெகா ஹிட் அடித்த ஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகர் தான்.! பல வருடம் கழித்து வெளியான தகவல்..

அப்படி பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், சஞ்சிதா செட்டி ஆகியோர்கள் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். சுமார் இரண்டு கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 35 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. கேங்ஸ்டர் படமாக நவீன சமுதாயத்திற்கு ஏற்றார் போல் முக்கிய கருத்துகளுடன் உருவான இப்படத்திற்கு சில நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இவ்வாறு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் காடம் கேங் என்ற பெயரில் ரீமேக் ஆனது இவ்வாறு இந்த படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் தொடங்கும் என இயக்குனர் நலன் குமாரசாமி சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்த தாஸ் கேரக்டரில் முதலில் பிரபல காமெடி நடிகர் வடிவேலு தான் ஒப்பந்தமாகி இருந்தாராம்.

வீட்டை விற்க முடிவெடுத்த தசாதரன்.. கடைசி நேரத்தில் அப்பா, அம்மா கௌரவத்தை காப்பாற்றிய மகா -ஆஹா கல்யாணம் ப்ரோமோ

ஆனால் அவருக்கு கதை பிடிக்காத காரணத்தினால் சில மாற்றங்களை கூறியுள்ளார். இதனை பட குழுவினர்கள் மறுத்துவிட்டதால் வடிவேலு நடிக்க முடியாது என கூறினாராம். இதன் காரணமாகத்தான் பிறகு விஜய் சேதுபதி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.