“சந்தானம்” கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது விஜய் சேதுபதி கிடையாது.? இந்த பிரபலம் தானாம்..!

vijay-sethupathy
vijay-sethupathy

நான்கு வருடங்கள் கழித்து உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவான  திரைப்படம்  விக்ரம். படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களில் படம் பிரமாண்ட வசூலை அள்ளி வருகிறது.

விக்ரம் படத்தில் பகத் பாசில், கமலின் நடிப்பு எப்படி பேசப்படுகிறதோ அதேபோல விஜய் சேதுபதியும் தனக்கு கொடுக்கப்பட்ட வில்லன் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்து படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக நிற்கிறார்.
ஒரு போதைப் பொருள் கும்பலின் தலைவன் எப்படி இருப்பானோ..

அதை அப்படியே தத்ரூபமாக படத்தில் காட்டி இருந்தார் விஜய் சேதுபதி. இந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதிக்கு வில்லன் ரோலில் அதிக பட வாய்ப்புகள் கிடைக்கும் என சினிமா பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர் அந்த அளவிற்கு விஜய் சேதுபதி மிரட்டி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் முதன்முதலில் படக்குழு வேறு ஒரு சில நடிகர்களை தான் தேர்வு செய்து உள்ளதாம் அதுகுறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம் முதலில் படக்குழு போதைபொருள் உலகின் தலைவனாக நடிக்க வைக்க  நடிகர் பிரபு தேவாவை தான் தேர்வு செய்ய பார்த்தன.

அவர் அல்லது ராகவா லாரன்ஸை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தது ஆனால் இறுதியில் படக்குழு  நடிகர் விஜய் சேதுபதியை அந்த ரோலிக்கு தேர்வாகி விட்டாராம். விக்ரம் படத்திலும் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்து அசத்தினார்.