தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இதுவரை தனுஷ் உடன் மட்டுமே அதிக படங்களில் கைகோர்த்து வெற்றியை கண்டு இருந்தாலும் தற்போது அவரிடம் இருந்து விலகி வெற்றிமாறன் தனது வழக்கமான டிராக்கிலே போகிறார். இந்த தடவை சூரி விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து விடுதலை படத்தை எடுத்து வருகிறார்.
இந்த படம் பெரிய லென்த் என்பதால் இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளார். அதில் முதல் பாகம் அதிரடியாக உருவாகி வருகிறது இந்த படம் காடு மலை போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. விடுதலை படம் ஜெயமோகனின் துணைவன் என்னும் சிறுகதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது இதில் சூரி காவலாளியாகவும்..
விஜய் சேதுபதி போராளியாகவும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் சத்தியமங்கலம் பகுதிகளில் காடு மலைகள் நிறைந்த பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறதாம் இந்த படத்தில் சூரி போலீசாக நடிப்பதால் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து அசத்துகிறாராம் காடுகளில் கல்களை அடுக்கி வைத்து அதில் உடற்பயிற்சி செய்த புகைப்படங்கள்..
வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விஜய் சேதுபதிக்கும் சரி, சூரிக்கும் சரி மிகப்பெரிய ஒரு வரவேற்பை கொடுக்கும் என தெரிய வருகிறது. விடுதலை படத்தின் முதல் கட்டப் படபிடிப்பு பிறகு பேசிய சூரி விடுதலை படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது இந்த படத்திற்கு ஒரு அடையாளம் கொடுத்துள்ளது என கூறினார்.
அதனைத் தொடர்ந்து விடுதலை படத்தின் முதல் பாதியை பார்த்த விஜய் சேதுபதி சூரி நடிப்பு அபாரமாக இருக்கிறது எனக் கூறி பாராட்டி தள்ளினாராம். சூரி காமெடி டிராக்கில் இருந்து மாறி தற்போது சிறப்பான கதைகளை தேர்வு செய்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என விஜய் சேதுபதி ஏற்கனவே சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.