Vijay Sethupathi : கடின உழைப்பின் மூலம் சினிமா உலகில் உயர்ந்தவர் விஜய் சேதுபதி முதலில் வில்லனுக்கு அடியாளாக நடித்தார். பின் படிப்படியாக முன்னேறி ஹீரோ அவதாரம் எடுத்தார். தென்மேற்கு பருவக்காற்று படம் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்ததை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான், சேதுபதி, ஆண்டவன் கட்டளை..
விக்ரம் வேதா, கருப்பன், 96 என ஹீரோவாக வெற்றி படங்களை கொடுத்து ஓடிய விஜய் சேதுபதி குணசித்திர மற்றும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் அப்படி இவர் நடித்த ஆரஞ்சு மிட்டாய், திருடன் போலீஸ், ஜிகர்தண்டா, ரம்மி என சொல்லிக்கொண்டு போகலாம்.. வில்லனாகவும் மிரட்டு வருகிறார்.
கருப்பு நிற டிரான்ஸ்பரெண்ட் புடவையில் ஹாட் போஸ்.. மில்கி பியூட்டி தமன்னாவின் புகைப்படங்கள்
ரஜினியின் பேட்ட, ஷாருக்கானின் ஜவான், விஜயின் மாஸ்டர் என பல படங்களில் நடித்திருக்கிறார் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தயங்காமல் நடித்து அதில் வெற்றி காணும் விஜய் சேதுபதிக்கு தற்பொழுது தமிழை தாண்டி பிற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.
கைவசம் விடுதலை பார்ட் 2, மேரி கிறிஸ்மஸ், மகாராஜா, காந்தி டாக்கீஸ், பிசாசு 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். திரை உலகில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார். இதனால் அனைவருக்கும் பிடித்த நடிகராக விஜய் சேதுபதி இருந்து வருகிறார் இந்த நிலையில் அவருடைய சொத்து மதிப்பு குறித்து நமக்கு தகவல் கிடைத்துள்ளது.
நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா..! புகைப்படத்தை பார்த்து திக்கு முக்காடி போய் நிற்கும் ரசிகர்கள்
அதன்படி பார்க்கையில் விஜய் சேதுபதி ஒரு படத்திற்கு குறைந்தது 10 கோடியில் இருந்து 21 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது கடைசியாக ஜவான் படத்திற்கு அவர் 21 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 140 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.