தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மக்கள் செல்வன் எனவும் போற்றப்படுபவர் தான் நடிகர் விஜய்சேதுபதி இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடிப்பது மட்டும் இல்லாமல் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ஆரம்பத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தன்னுடைய சிறந்த திறமையை பயன்படுத்தி இதன்மூலமாக தற்போது மிகப்பெரிய கதாநாயகனாக வலம் வருவது மட்டும் இல்லாமல் பல்வேறு திரைப்படங்களை எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
அந்தவகையில் பேட்டை மாஸ்டர் திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் கூட வில்லனாக நடித்துள்ளார். இவ்வாறு அவர் நடித்த திரைப்படம் தான் உப்பெனா இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறு இந்த திரைப்படத்தின் மூலம் இளம் நடிகையாக அறிமுகமானவர் தான் கீர்த்தி ஷெட்டி. இவ்வாறு இவர் இந்த திரைப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் விரிஞ்சி வருமா என்ற தெலுங்கு இயக்குனர் திரைப்படம் ஒன்றில் கீர்த்தி ஷெட்டி சூழ்நிலை விநாயகர் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.