தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க தற்போது சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து வருபவர் நடிகர் சிம்பு இவர் அண்மையில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்து நடித்த மாநாடு திரைப்படம் நடித்தார். படம் எதிர்பாராத அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த தோடு சிம்புவை தற்போது தலைதூக்கியுள்ளது.
இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள சிம்புவும் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இப்போ இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு இந்த படத்தின் ட்ரெய்லர் கூட அண்மையில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை முடித்து விட்டு அவர் அடுத்ததாக பத்து தல மற்றும் கொரோனா குமார் ஆகிய படங்கள் இருக்கின்றன. அடுத்ததாக மக்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்திருக்கும் திரைப்படம் கொரோனா குமார் இந்த படத்தின் டைட்டில் வித்தியாசமாக இருப்பது மற்றும் சிம்பு நடிப்பதே காரணம் என தெரியவந்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணமே இருக்கின்றன இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.
இவர்கள் இருவரும் ஏற்கனவே செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக இவர்கள் இருவரும் இணைவதால் அந்த படம் வெற்றி படமாக மாறும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.