தமிழ் சினிமாவின் தற்சமயம் மல்டி ஸ்டார் திரைப்படங்கள் பெருமளவு வரவேற்பை பெற்று வருகிறது அந்த வகையில் இது போன்ற திரைப்படங்களில் பல்வேறு முன்னணி நடிகர்களும் தயங்காமல் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் பல்வேறு திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார்.
அந்த வகையில் தன்னுடைய பயணத்தை விக்ரம் வேதா திரைப்படத்தில் ஆரம்பித்து அதன்பிறகு பேட்டை, மாஸ்டர் தற்சமயம் விக்ரம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக இவர் கதாநாயகனாக நடித்த திரைப்படங்களை காட்டிலும் எதிர்மறையாக நடித்த திரைப்படத்தில் தான் அதிக அளவு வரவேற்று பெற்றுள்ளார்.
இந்நிலையில் 1802 ஆம் ஆண்டு சிவாஜி மற்றும் கமல் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தேவர் மகன் திரைப்படம் ஆகும் எனவே படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்கள் அதில் கிராமத்து தலைவனாக நடித்த சிவாஜிக்கு மகனாக கமல் நடித்து இருப்பார்.
இந்நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் நடிகர் கமல் அவர்கள் சிவாஜி கதாபாத்திரத்திலும் கமல் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எனவே விஜய் சேதுபதி பொதுவாக எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அடித்து நொறுக்குவது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் அந்த வகையில் மறுபடியும் ஒரு கமர்ஷியல் கதாபாத்திரம் என்றால் அது யோசிக்க வேண்டிய விஷயம்தான் ஆனால் நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே கமலிடம் உங்களிடம் ஒரு படம் பண்ண வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து இவை உண்மையாக இருக்க அதிக அளவு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்கள்.