மகள் வயதுள்ள நடிகையுடன் ரொமான்ஸ் செய்ய ஜோடி போடும் விஜய் சேதுபதி.! வயது வித்தியாசம் கொஞ்சம் கூட பார்க்க மாட்டீர்களா விலாசும் நெட்டிசன்

vijaysethuapthi

தமிழ்சினிமாவில் வருடத்திற்கு அரைடஜன் திரைப்படங்களில் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் நடிகர் விஜய் சேதுபதி.  இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி தற்போது பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர் நிறுவனம் மூலம் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக சேதுபதி 46 என பெயர் வைத்துள்ளார்கள் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.

மேலும் விஜய் சேதுபதி நடிக்கும் 46 ஆவது திரைப்படத்தை பழனி தனுஷ்கோடி மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள் ஏனென்றால் இது கிராமத்து கதை என்பதால் இந்த பகுதியை தேர்வு செய்துள்ளார் இயக்குனர்.  மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.

ponram
ponram

ஏற்கனவே விஜய் சேதுபதி சேதுபதி திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த மிரட்டினார் இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் கேரக்டர் முற்றிலும் மாறுபட்டதாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் என கூறப்படுகிறது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நகைச்சுவை கலந்த நடிப்பை வெளிப்படுத்த இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் ஸ்டைல் மற்றும் என்னுடைய ஸ்டைல் இணைந்து இருக்கும் என படத்தின் இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும் நிலையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் அனுகீர்த்தி வாஸ் என்பவர் நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.

இவர் 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு அளவில் நடந்த பெமினா மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர். இவருக்கு வயது 22 தான் இந்த நிலையில் 43 வயது உடைய விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்வதால் ரசிகர்கள் ஜோடி போடுவதற்கு கொஞ்சம் வயது வித்தியாசம்  பார்க்க மாட்டீர்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

vijay sethupathi