நடிகர் விஜய்சேதுபதி தற்போது இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு புது ரூட்டை போட்டு கொடுத்துள்ளார். இவர் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோ, வில்லன் என சினிமா பயணத்தை வேற மாதிரி மாற்றியுள்ளார்.
தற்போது இளம் தலைமுறை நடிகர்கள் இந்த யுத்தியை பயன்படுத்தி சினிமா உலகில் நல்ல காசு பார்த்து வருகின்றனர். விஜய் சேதுபதி கடைசியாக தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் அதனை தொடர்ந்து தற்போது ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.
அந்த வகையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் முதல் முதலாக ராம் சரண் இணைந்து பணியாற்றியவரும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய்சேதுபதிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சம்பளத்தை அதிகமாக கேட்கவே படக்குழு.
அவரை விட்டுவிட்டு தற்பொழுது சிறப்பான வில்லனாக நடித்து வரும் நடிகர் எஸ். ஜே. சூர்யாவை கமிட் செய்து உள்ளது அவர் மாநாடு திரைப்படத்தில் 4 கோடி சம்பளம் வாங்கி இருந்தாலும் அந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியதோடு மட்டுமல்லாமல் எஸ். ஜே. சூர்யாவின் நடிப்பு மிரட்டும் வகையில் இருந்ததால் சம்பளத்தையும் உயர்த்தி உள்ளார்.
சொல்லப்போனால் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு வில்லனாக நடிக்க சுமார் 9 கோடி கேட்டுள்ளார் அதற்கு படக்குழுவும் ஓகே சொல்லி அவரை ஒப்பந்தம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. எஸ். ஜே. சூர்யாவுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக அமையும் பட்சத்தில் அவரது சினிமா பயணம் தமிழை தாண்டிய தெலுங்கிலும் நல்லதொரு இடத்தைப் பிடித்து அசத்தும் என கூறப்படுகிறது.