தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தற்போது சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக விஸ்வரூபம் எடுத்துள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ். டாப் ஹீரோயின்னாக இருந்தாலும் நல்ல கதை கிடைத்தால் போதும் ஹீரோயின் அந்தஸ்தை பார்க்காமல் குணசித்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோல் என எதுவாக இருந்தாலும் படங்களில் நடித்து அசத்திவார்.
முதலில் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். அப்படி காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அசத்தினார் இந்த படம் அவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது அதன் பிறகு இவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி நடித்து இப்பொழுது முன்னணி நடிகையாக மாறி உள்ளார். இப்போ ஒரு வருடத்திற்கு நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இருவரும் நல்ல நண்பர்களாக இன்றுவரை இருக்கின்றன. விஜய் சேதுபதியும், ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை இணைந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, க/பெ. ரணசிங்கம் போன்ற பல்வேறு படங்களில் நடித்து அசத்தி உள்ளனர்.
அதேசமயம் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு சினிமா உலகில் ஏதேனும் டவுட் என்றால் விஜய் சேதுபதியிடம் தான் கேட்பாராம். அப்படி ஒரு தடவை ராஜேஷ் -யிடம் மொக்கை கதையாக இருந்தாலும் அதை கேட்குமாறு கூறி உள்ளார். காரணம் எந்த ஒரு கதையையும் அலட்சியமாக எண்ணிவிடாதே மொக்க கதைகள் கூட நமக்கு தேவையான ஒரு முக்கிய விஷயம் இருக்கும்.
எனவே எந்த ஒரு கதையும் ஒதுக்கி விடக் கூடாது இரண்டரை மணி நேரமும் கதை கேட்பது கஷ்டம் தான் ஆனால் அதற்காக எந்த கதையும் ஒதுக்கி விடாதே ஒவ்வொரு கதையும் நமக்கு பொக்கிஷம் மாதிரி என விஜய் சேதுபதி டிப்ஸ் கொடுத்துள்ளார் அதையும் ஐஸ்வர்யா ராஜேஷ் இன்றுவரையிலும் பின்பற்றி வருகிறாராம்.