நடிகர் சிவகார்த்திகேயனை பற்றி முதல்முறையாக மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி.! என்ன இப்படி சொல்லிட்டாரு..

vijaysethupat
vijaysethupat

தமிழ் திரை உலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்பத்தில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின்பு தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், தர்மதுரை, சேதுபதி போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இது போக விஜய் சேதுபதி சினிமாவில் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் குணச்சித்திர கதாபாத்திரம் முக்கிய ரோல் போன்றவற்றிலும் நடித்து அசத்துகிறார். அப்படி கமலின் விக்ரம் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் விஜய் சேதுபதி நடித்திருந்தார் அது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

மேலும் விஜய் சேதுபதி தமிழைத் தாண்டி ஹிந்தி, தெலுங்கு போன்ற பல மொழிகளிலும்.. பிஸியாக நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி காவல் துறை அதிகாரியாக நடித்துள்ள டிஎஸ்பி திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்த படத்தில் அவருடன் இணைந்து அனு கீர்த்தி, சாந்தினி, பிக் பாஸ் ஷிவானி நாராயணன், குக் வித் கோமாளி புகழ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் மற்றும் விமலும் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் இடையே போட்டிகள் நிலவுவதாக அவர்களது ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் அதற்கு தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.

அவர் கூறியது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நான் நடிக்க தயார் அவருடன் நண்பர் கதாபாத்திரத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறேன் என கூறி பின் எங்கள் இருவருக்கும் இருப்பது ஆரோக்கியமான போட்டி தான் நாங்கள் போட்டி நடிகர்கள் இல்லை என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் பரவி வருகிறது.